கடலூர் மாவட்ட மழை, வெள்ளத்துக்கு இது வரை 3 பேர் பலியாகி உள்ள நிலையில்,வெள்ளநீர் தேங்கி யுள்ள பகுதிகளில் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்க ளுக்கு துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வெள்ள பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட் டத்தில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை உணவு தாங்கி அனைத்துத்துறை அலுவலர்களுடன் வெள்ள பாதிப்பு குறித்த விவ ரங்களை கேட்டறிந்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். அமைச்சர்கள் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், செந்தில்பா லாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4,321 குடும்பங்க சேர்ந்த 6,601 ஆண்களும்,7.108 பெண்களும், 1,129 குழந்தை கள் மீட்கப்பட்டு நிவாரண மையங் களில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 36,251 பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள் ளது. மாவட்ட அவசர கட்டுப்பாட்டுக்கு மையத்திற்கு இதுவரை 261 புகார்கள் வரப்பெற்று, 94 புகார்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது.
35 புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. 341 குடிசை வீடுகள் பகுதி அளவிலும், 10 குடிசை வீடுகள் முழுவதும் சேதம டைந்துள்ளது. 71 கால்நடை மற்றும் 2,520 கோழிகள் உயிரிழந்துள்ளது. இதற்கான இழப்பீட்டு தொகையினை பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க அறிவுறுத் தப்பட்டுள்ளது.
கடலூரில் 2 பெண்கள், ஒரு குழந்தை என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள் ளனர். மேலும், 2 பேர் லேசான காயத்துடன் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 360 மின்கம்பங்கள் மற்றும் 2 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக கண்ட றியப்பட்டுள்ளது.
அதில் 77 மின்கம்பங்கள் மாற்றி அமைக் கப்பட்டுள்ளது. மேலும், 1.7கி.மீ நீளத்திற்கான மின்பாதை சேதமடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 51,010 ஹெக் டேர் விவசாய நிலங்கள் நீரால் சூழப்பட்டுள் ளது. அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ள பாதிப்பு குறித்த மீட்பு பணிகளில் 9,507 அலுவலர்கள் மற்றும் தன் னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். பொதுப்பணித் துறை மூலம் தேவையான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆற்றுநீர் வரா மல் தடுப்பதற்காக 22 ஆயிரம் மணல் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு பொதுமக்களுக்கு இயல்பு நிலையினை ஏற்ப டுத்த வேண்டும். அனைத்து அலுவ லர்களும் தங்களுக்கு ஒதுக் கீடு செய்யப்பட்ட பணியை முறையாக மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங்பேடி, மின் உற்பத்தி மற்றும் பகிர்கமானக் கழக மேலாண்மை இயக்குனர் நந்தகு மார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை கூடுதல் இயக்குனர் சரண்யா, மாநகராட்சி ஆணை யாளர் எஸ்.அனு உள்பட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.