சேத்தியாதோப்பு அருகே பூதங்குடி எஸ்.டி.சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2025-26-ம்கல்வி ஆண்டுக்கான மாணவ தலைவர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின் தலைமை தாங்கினார். சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.பி.டி.இளஞ்செழியன், குருரம் குழுமம் சேகர் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிர்வாக இயக்குனரும், குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் தீபா சுஜின் வரவேற்றார்.
பள்ளியின் மாணவ தலைவர் மற்றும் மாணவக்குழு தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். போதை ஒழிப்பு வாரத்தையொட்டி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றன. இதில் ஆசிரியர்கள், மாணவ&-மாணவிகள் கலந்து கொண்டனர்.