fbpx
Homeபிற செய்திகள்ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் தேசிய மருத்துவர்கள் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமை தாங்கினார். ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள் எழிலரசி, இளவரசன், தேவிகா, பாரதிராஜா, பிரபா,சதீஷ் மருத்துவருக்கு தேசிய மருத்துவ தினத்தை முன்னிட்டு நினைவு பரிசு மற்றும் பொன்னாடை வழங்கி வாழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை கிளை இந்தியன் ரெட் கிராஸ் பொறுப்பாளர்கள் ரஜினி சங்கர், முனியப்பன், ராம், எஸ்ஐ மோகன், ஆடிட்டர் லோகநாதன், சமூக ஆர்வலர் பாபு அப்துல் சையத் உட்பட பலர் மருத்துவர்களை வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ மனையில் பணியாற்றுகின்ற செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img