fbpx
Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு ஜி.குப்புசாமி நாயுடு நினைவு (ஜி.கே.என்.எம்) மருத்துவமனை பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தியது.

இது ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தர அங்கீகார மையத்தினால் சான்றளிக்கப்பட்ட கோவையின் முதல் மேம்பட்ட பக்கவாத சிகிச்சை மையமாகும். இது விரிவான பக்கவாத சிகிச்சையில் தனிச்சிறப்புகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஜி.கே.என்.எம் வெளி நோயாளி கள் மருத்துவ மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி, அவசரகால மருத்துவம் மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் பங்கேற்று பொதுமக்களுடன் உரையாடினர்.

நரம்பியல் நிபுணர்கள் டாக்டர்.பார்வதி மற்றும் பாக்டர். ரவிச்சந்திரன், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்.பாலா செந்தில்குமரன் மற்றும் டாக்டர்.கவின் பாரதி, இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி மருத்துவ நிபுணர் டாக்டர் ராஸ்மிரஞ்சன் பதி, அவசரகால மருத்துவ ஆலோசகர் டாக்டர். சபரிஷ் சிவகுமார், ஃபிசியோதெரப்பிஸ்ட் டாக்டர்.மகேஷ் மித்ரா மற்றும் செவலியர்கள் மற்றும் துணை நிலை ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் பக்கவாதக் குழுவால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பக்கவாதத்தால் மூளையில் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கும், இதிலிருந்து மீண்டு வருவதற்கும் ஆரம்ப கட்டத்திலேயே இதனைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுதல் மிக முக்கியம் என்பதனை வலியுறுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img