பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன் புதிய சொகுசு காராக எம்ஜிஎம்9 என்ற பிரம்மாண்டமான சொகுசு எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். அவரது இசையைப் போலவே, அவர் புதியதாக வாங்கியுள்ள இந்த கார் புதுமை, நேர்த்தியுடன் தொழில் நுட்பத்தின் சங்கமமாக விளங்குகிறது.
ஆடம்பரத்தையும் நுணுக்கத்தையும் மறுபரிசீலிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு, ஆடம் பரத்தை பாராட்டை தேர்ந்தெடுக்கும் தன்மையுள்ளவர்களுக்கு எம்ஜி எம்9 பொருத்தமானதாக உள்ளது.
இதில் உள்ள பிரெசிடென்ஷியல் இருக்கைகள் 16 விதமாகச் சரி செய்யும் வசதியையும், எட்டு மசாஜ் முறைகளையும் கொண்டுள்ளன. வெப்ப மூட்டல் மற்றும் காற்றோட்ட வசதி, யாட்-ஸ்டைல் ட்யூஅல் சன்ரூஃப் ஆகியவற்றுடன் கூடிய அதன் பிரெசி டென்ஷியல் சீட்கள் சுகபோகத்தையும் வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் ஒரு அமைதியான சூழலை உருவாக்குகின்றன.
இது மகாதேவனின் கலை நயத்தையும் உருவகமாகும். அம்பியன்ட் லைட்டிங் மற்றும் காக்னாக் பழுப்பு நிற உள்தளம் ஒவ்வொரு பயணத்தையும் சிறப்பாக்குகிறது. அதேசமயம், நுண்ணறிவு கைமேசை கட்டுப்பாடுகளும், மாற்றத்துக்கேற்ப சேமிப்பு வசதிகளும் பயணத்தை எளிதாக்குகின்றன.
எம்ஜி வி9-யின் 13 ஸ்பீக்கர் கொண்ட பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், சப்-வூஃபர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் இணைந்து, ஒவ்வொரு பயணத்தையும் தனிப்பட்ட இசை விருந்தாக மாற்றும் திறம்பட்ட ஒலி அனுபவத்தை வழங்குகிறது.
உயர் திறன் கொண்ட ஸ்டீல் வடிவமைப்பில் உரு வாக்கப்பட்ட எம்-9, 7 ஏர்பேக்குகள், லெவல் 2 ADAS மற்றும் 5-ஸ்டார் EURO NCAP – ANCAP மதிப்பீடுகளுடன் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது.
எம்ஜி எம்-9, இந்தியாவின் 13 முக்கிய நகரங்களில் உள்ள 14 செலக்ட் அனுபவ
மையங்களில் காணவும் முன்பதிவு செய்யவும் கிடைக்கிறது.



