fbpx
Homeபிற செய்திகள்மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி ‘சாம்பியன்’

மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி ‘சாம்பியன்’

தமிழ்நாடு மாநில சீனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி, சென்னை ஃபயர்வால் அகாடமி வளாகத்தில், சமீபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் இரட்டையர் பிரிவில், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆத்யா வாரியத் – சானியா சிக்கந்தர் இணை சாம்பியன் பட்டம் வென்றனர்.

காலிறுதிச் சுற்றில் யுவஸ்ரீ – அக்சயா இணையை 21-8, 21-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. அரையிறுதிச் சுற்றில் ஸ்ரேயா பாலாஜி – தன்யா இணையை 21-15, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

இறுதிச்சுற்றில் ஆத்யா வாரியத் – சானியா சிக்கந்தர் இணை 21-14, 21-14 என்ற செட் கணக்கில் ரிது வர்ஷினி – தீப்தா இணையைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.


கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நடைபெற்ற யோனெக்ஸ் சன் ரைஸ் ரேங்கிங் போட்டியில் இக்கல்லூரி மாணவர் பி.எஸ். வைபவ் ஸ்ரீநாத், மாணவி ராஷ்மி கணேஷ் ஆகியோரும்  வெற்றி பெற்றனர். பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் முனைவர் கே.வடிவேலு ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். 

படிக்க வேண்டும்

spot_img