முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிதம்பரம் நகராட்சியில் துவக்கி வைத்ததை அடுத்து, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 21, 22 மற்றும் 23 வது வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அழகேசபுரம் பகுதியில் உள்ள ஆனந்தா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்க ளுடன் ஸ்டாலின் முகாமை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பனோத் ம்ருகேந்தர் லால், உதவி ஆணையர் வெங்கடாசலம், வட்டாட்சியர் முரளிதரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் ஜான்சிராணி, மகேஸ்வரி, தனலட்சுமி, வட்டச் செயலாளர்கள் முனியசாமி, மனோ மரியதாஸ், சேகர், வட்டப் பிரதிநிதிகள் மூக்கையா, செல்வராஜ், சுதாகர், சுரேஷ், லிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் ராஜா பெரியசாமி, சூர்யா உள்ளிட்ட திமுக நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.
இம் முகாமில் 775 மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள், 99 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சம்பந் தப்பட்ட விண்ணப்பங்கள், 59 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சம்பந்தப் பட்ட விண்ணப்பங்கள் உள்ளிட்ட மொத்தம் ஆயிரத்து 1119 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.



