கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் வாசகர் மன்றம் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து, அவர் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து காமராஜரின் வாழ்க்கை குறித்து மாணவர்கள் உரையாற்றினர். இதில் மாணவர்களுக்குக் கல் லூரியின் முதல்வர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
முன்னதாக தமிழ் மன்ற மாணவ தலைவி ர.அல்மாஸ் வரவேற்றார்.
முடிவில் தமிழ் மன்ற மாணவ செயலர் ரா.ஐஸ்வர்யா ஸ்ரீவத்ஸ் நன்றி கூறினார்.
நிகழ்வை தமிழ்த் துறைத் தலைவர் முனை வர் த.விஸ்வநாதன், தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.கோபிகா, வாசகர் மன்ற ஒருங் கிணைப்பாளர் பேராசி ரியர் சி.பிரபாகர், மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



