மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் எஸ்.எஸ்.வி.எம் விதான் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது. மாணவி பாவணா எஸ்.பி.எல். 12-ஆம் வகுப்பு வரவேற்றார்.
விளையாட்டு தின விழாவிற்கு மீரா பல்லா, (ரூ காண்டினம் பள்ளியின் தலைவர்) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தேசியக் கொடியை அவர் ஏற்றிவைத்தார்.
பள்ளிக் கொடியை கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், அறங்காவலர் மோகன்தாஸ் ஆகியோர் ஏற்றி வைத்தனர். ஒலிம்பிக் கொடியை கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜா ஷெரிஃப் ஏற்றி வைத்தார்.
2023-2024 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு ஆண்டறிக்கையை 12 ஆம் வகுப்பு விளையாட்டுக் குழு மாணவர் தலைவர் ஷியாம் வாசித்தார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசு கோப்பைகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சிவப்பு அணி வென்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள்,ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.