போதைப்பொருள் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் விதமாகவும், 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 78 கி.மீ சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே போதைப்பொருள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாந கர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 78 கிலோ மீட்டர் சைக்கிள் பேர ணியாக சென்றார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியில் 16 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, டவுன்ஹால், செட்டி வீதி, பேரூர், பச்சாபாளையம், ஆலாந்துறை, மாதம்பட்டி, சாடிவயல், ஈசா யோகா சென்று, மீண்டும் அதே வழியாக வந்து இறுதியில் அவிநாசி சாலையில் பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடைகிறது.
சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மைதானத்தில் உறுதிமொழி எடுக்கின்றனர்.