அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தமிழ் புலிகள் கட்சி வரவேற்கிறது. இது குறித்து தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், பொதுச்செயலாளர் இளவேனில் நிர்வாகிகள் தம்பி செந்தில் சந்திரன் ஆகியோர் கூறியதாவது:
2009ம் ஆண்டு டாக்டர் கலை ஞர் தலைமையிலான திமுக அரசு வழங்கிய 3% உள்இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எந்த தடையுமில்லை என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.
இந்த வழக்கில் தமிழ்ப்புலிகள் கட்சி தன்னையும் இணைத்துக் கொண்டு வழக்கறிஞர்களை நியமித்து வழக்காடினோம். அதன்படி இந்த உள் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு வலு சோக்கும் விதமாக துணை நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சட்ட மன்றத்தில் தொடந்து குரல் கொடுத்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹீருல்லாக்கும், இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திரா விடர் விடுதலைக்கழகம், திராவி டர் கழகம் மற்றும் அனைத்து ஜன நாயக தோழமை சக்திகளுக்கும் தமிழ்ப் புலிகள் கட்சி தனது நன்றியை தெரி வித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.