fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவியருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவியருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் கல்வி நிறுவனங்களுக்கும் தொழில் துறைக்குமான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் கல்லூரி மாணவியருக்கான தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வளர்க்கும் ‘ஸ்டெம் எஜுகேஷன்’ என்னும் திட்டமானது ஐசிடி அகாடெமி, ஐடிசி இன்போடெக் நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது.

ஸ்டெம் எஜுகேஷன்

எஸ்என்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசாமி தலைமை தாங்கினார். ஐடிசி இன்போடெக் நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடண்ட் ஹெதல் தேசாய், துணைத் தலைவர் கே.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.ஐசிடி அகாடெமியின் துணைத்தலைவர் எல்.சுரேஷ் பாபு, துணைப்பொது மேலாளர் விஷ்ணு சஞ்சய் ஆகியோர் ஸ்டெம் எஜுகேஷன் குறித்து விளக்கினர்.
இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் அதிநவீன பயிற்சிகளைப் பெறுவதோடு வேலைவாய்ப்புக்கான திறன்களையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

படிக்க வேண்டும்

spot_img