fbpx
Homeபிற செய்திகள்கோவை பள்ளியில் குழந்தை தொழிலாளர் திட்ட கலந்துரையாடல்

கோவை பள்ளியில் குழந்தை தொழிலாளர் திட்ட கலந்துரையாடல்

கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள சிந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் திட்டம் குறித்த கலந்து¬ராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ, மாணவிகளுடன் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் டி.வி.விஜய்குமார் கலந்துரையாடினார். சமுதாயத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
மேலும் குழந்தைத் தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே ஏற்படுத்த மாணவ மாணவிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

குழந்தைத் தொழிலாளர் இல்லாத சிறந்த எதிர்காலத்தை உருவாக்க கடினமாக உழைக்க வேண்டும் என்றும் நன்றாக படிக்க வேண்டும் என்றும் திட்ட இயக்குநர் டி.வி.விஜய்குமார் ஊக்குவித்தார். குழந்தைத் தொழிலாளர்களுக்கான காரணங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் அறிவிப்புகள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் சிந்தி வித்யாலா மாணவி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img