fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீஅபிராமி கல்வி நிறுவன ஆண்டு விழா

ஸ்ரீஅபிராமி கல்வி நிறுவன ஆண்டு விழா

ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் ஆண்டுவிழா இன்று (பிப்.25) கோவை ஈச்சனாரியில் உள்ள ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி வளாகத்தில் துவங்கியது.
ஸ்ரீ அபிராமி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் பி.பெரியசாமி 1996-ம் ஆண்டில் மாணவ, மாண வர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதன் மூலம், மனிதகுலத்திற்கு தரமான பராமரிப்பை வழங்கு வதற்காக, ஸ்ரீ அபிராமி அறக்கட்டளையை துவங்கினார்.

ஸ்ரீ அபிராமி மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவனையும் அதே ஆண் டில் நிறுவப்பட்டது.ஸ்ரீ அபிராமி இன்ஸ்டிடியூஷன்ஸ் 2008-ம் ஆண்டு செவிலியர் கல்லூரியுடன் தொடங்கப்பட்டது.பார்மசி, பிசியோதெரபி, ஏ.எச்.எஸ் மற்றும் ஆக்குபேசனல்தெரபி கல்லூரிகள் துவங்கப்பட்டன.

இயக்குநர்கள் மருத்துவர் குந்தவிதேவி

ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் ஆண்டுவிழா (பிப்.25) கோவை ஈச்சனாரியில் அபிராமி செவிலியர் கல்லூரி வளாகத்தில் துவங்கியது. கல்லூரியின் இயக்குநர்கள் மருத்துவர் குந்தவிதேவி, மருத்துவர் உமாதேவி, மற்றும் மருத்துவர் சுச்சரிதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி முதல்வர் மருத்துவர் ரேணுகா வரவேற்றார். டீன் டாக்டர் அர்வின்பாபு, ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் வளர்ச்சி, முக்கிய நிகழ்வுகள் மற்றும் சாதனைகள் பற்றி எடுத்துரைத்தார்ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் பி.பெரியசாமி, தலைமை தாங்கி பேசினார்.

இயக்குனர்கள் மருத்துவர் செந்தில்குமார், மருத்துவர் பாலமுருகன் மற்றும் மருத்துவர் உமாதேவி சிறப்பு ரையாற்றினர். சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மாணவர்க ளிடையே பேசினார். ஆண்டு விழாவினை முன்னிட்டு நடை பெற்ற விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சி களுக்கான போட்டியில் வெற்றி பெற் றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மருத்துவர் நரேஷ்பாபு , ஆக்குபேஷனல்தெரபி கல்லூரி முதல்வர் நன்றி கூறினார்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பார்மஸி கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தில்குமார், பிசியோ தெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img