fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் சிறப்பு சுருக்க முறைத்திருத்த ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலையில் சிறப்பு சுருக்க முறைத்திருத்த ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025 குறித்து வாக்காளர் பட்டியலுக்கான மேற்பார்வையாளர் மற்றும் வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையாளர்  ஜி.பிரகாஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தியத்தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம் 2025 ஆனது 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 06.01.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலுக்கான மேற்பார்வையாளர், வேளாண் வணிகத்துறை ஆணையாளர் ஜி.பிரகாஷ் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதிபன், வாக்காளர் பதிவு அலுவலர்களான சார் ஆட்சியர் செய்யார் செல்வி பல்லவி வர்மா, வருவாய் கோட்டாட்சியர்கள்  மந்தாகினி (திருவண்ணாமலை) மற்றும் பாலசுப்பிரமணியன் (ஆரணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img