Homeபிற செய்திகள்ஈரோட்டில் சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சி

ஈரோட்டில் சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சி

10வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி ஈரோடு சரக கைத்தறித்துறையின் சார்பில் அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பெருந்துறையில் கைத்தறி ரகங்களை பிரபலப்படுத்தும் விழிப்புணர்வு முகாம் மற்றும் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் புவிதா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்த கைத்தறி தின விழாவில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் மற்றும் தனித்துவம் குறித்தும், கைத்தறி குறியீடுகள் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கைத்தறி கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கைத்தறி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

மேலும், இந்நிகழ்வுகளில் ஈரோடு கைத்தறி துறை உதவி இயக்குனர் தமிழ்செல்வன், உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல்கணேசன், உதவி இயக்குனர் இளங்கோவன், கைத்தறி துறையை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img