பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி கங்கா மருத்துவமனையுடன் இணைந்து ஆன்-சைட் மாமோகிராம் ஸ்கிரீனிங் நடத்தியது.
கடந்த ஆகஸ்ட் 20 மற்றும் 21ம் தேதிகளில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணமாள் மகளிர் கல்லூரியின் விலங்கியல் துறை கங்கா மருத்துவமனையுடன் இணைந்து பிங்க் ரிப்பன் வாக்குறுதி திட்டம் என்ற ஆன்-சைட் மாமோகிராம் ஸ்கிரீனிங் நடத்தியது.
இந்த மருத்துவ முகாம் 40 வயதிற்கு மேற்பட்ட, வயதுடைய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல் லாத ஊழியர்களுக்கு நடத்தப்பட்டது. மேலும் இம்முகாம் வலியற்ற ஸ்கிரீனிங் மூலம் மார்பக புற்றுநோயை முன்கூட் டியே கண்டறிவதை நோக் கமாகக் கொண்டுள்ளது.
கங்கா மருத்துவமனை யின் நீரிழிவு கால் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குமனன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் பரிசோதனை முகாமை நடத்தினர். இம் முகாமை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் P.Bஹாரத்தி தொடங்கி வைத்தார்.
கங்கா மருத்துவமனையின் மாமோகிராம் ஆலோசகர் ர.கார்த்திகா, மாமோகிராம் ஸ்கிரீனிங் குறித்து விளக்கினார். இத்திட்டத்தின் மூலம் 150 ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.