கோவை நிர்மலா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை நடத்திய வாசிநேசி அறிமுக விழா தமிழ்த்துறையின் தலைவர் உதவிப்பேராசிரியர் ப.மகேஸ்வரி வரவேற்புரையுடன் தொடங்கியது.
கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி மேரி பபியோலா ஆகியோர் தலைமை தாங்கினர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், செய்தியாளர் வே.பிரசாந்த் பேசுகையில் தனது வாசிப்பு பழக்கமே சிறந்த படைப்பாளராக மாற்றியது என்பதை, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மாணவிகள் வாசிப்பின் சிறப்பை பற்றி அறிந்து கொண்டனர்.
முனைவர் ராமதிலகம் மற்றும் வாசிநேசி அமைப்பின் அங்கத்தினர்கள் 90 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
வாசிநேசி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் கவிதாதேவி நன்றியுரை வழங்கினார்.