fbpx
Homeபிற செய்திகள்வரும் 16 முதல் 19-ம் தேதி வரை சென்னையில் ‘தென்னிந்திய வர்த்தக கண்காட்சி’

வரும் 16 முதல் 19-ம் தேதி வரை சென்னையில் ‘தென்னிந்திய வர்த்தக கண்காட்சி’

இந்தியாவின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் குழுமங்களில் ஒன்றான அப்பேரல் மேனுபேக்சர்ஸ் ஆஃப் இந்தியா (ஏஎம்ஐ), சென்னையில் வரும் 16-ம் தேதி முதல் 19 வரை ‘மெகா சவுத் கான்கிளேவ் 2.0’ நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

இக்கண்காட்சியில் 250க் ம் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கின்றன.
நாகர்கோவிலில் இருந்து எஸ்.நல்லபெருமாள் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எல்.ரவீந்திரன், திருச்சி சாரதாஸ் ரோஷன் மணவாளன், கர்நாடகா மாநிலம் தாவங்கேரி பி.எஸ்.சனபசப்பா நிறுவனத்தை சேர்ந்த பி.யு.சந்திர சேகர் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

அத்வைத் 2.0 பற்றி தர்மேஷ் நந்து – நிறுவனர், அப்பேரல் மேனுபேக்சர்ஸ் ஆஃப் இந்தியா கூறியதாவது: அத்வைத் 2.0 நிகழ்ச்சி மூலம், ஒட்டு மொத்த சமூகம் வளரவும், மதிப்பு மிக்க இணைப் புகளை உருவாக்கவும் ஒரு தளத்தை கொண்டு வருவதால், ஏஎம்ஐ -ல் மிகவும் உற் சாகமாக இருக்கிறோம்.

கடந்த 2-3 ஆண்டுகளில் சந்தை உணர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் விருப்பத் தேர்வுகள் வியத்தகு முறையில் மாறியுள்ளன.

பரிணாமம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளுக்காக ஒரு வலுவான சமூகத்தை உருவாக்க உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், முகவர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைப்பதை ஏஎம்ஐ நோக் கமாக கொண்டுள்ளது என்றார்.

இந்தியா முழுவதும் உள்ள ஆயத்த ஆடை சந்தையின் முழு மதிப்பு சங்கிலிக்கும் அர்த்தத்தை சேர்க்க அவை ஒன்றோடு ஒன்றாக செயல்படுகின்றன. ஏஎம்ஐ தென்னிந்தியா முழுவதும் இதுவரை 39 கண்காட்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இன்று தென்னிந்தியாவில் 1200-க்கும் மேற்பட்ட தொழில்துறை சார்ந்த நபர்கள் கலந்து கொள்ளும் முன்னணி வர்த்தக கண்காட்சியாக மாறியுள்ளது. 2018-ல் நடந்த அவர்களின் முதல் மண்டல அளவிலான கண்காட்சியானது 3500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கண்டது. ரூ.100 கோடிக்கும் அதிகமான வணிகத்தை உருவாக்கியது.

படிக்க வேண்டும்

spot_img