கோவையில் கொசிமா எம் எஸ் எம் இ எக்ஸ்போ 2023 என்றபெயரில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் தொழில் கண்காட்சி, பீளமேடு பத்மாவதி அம்மாள் கலாச்சார மையத்தில்தொடங்கியது.
வரும் 13-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
கோவை மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் முருகன், தமிழ்நாடு சிறு குறு தொழில்கள் சங்கம் தலைவர் மாரியப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கண்காட்சியில் கொசிமா தலைவர் நல்லதம்பி, சிட்கோ கிளை மேலாளர் சண்முக வடிவேல், கொசிமா முன்னாள் தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு சிறு குறு தொழில்கள் சங்கம் துணைத் தலைவர் சுருளி வேல், விஜய தீபன், சாந்தா சீலா, ஆர் கிருஷ்ணமூர்த்தி, ஜேம்ஸ்எஸ் லோகநாதன், நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 82 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி தினசரி காலை 10 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.