ஸ்கில் ஹப் ஆன்லைன் கேமிங் கூட்டமைப்பின் கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடர் சாம்பியன்ஷிப் தெற்கு மண்டல தொடர் 2 சென்னையில் வெற்றிகர மாக நிறைவடைந்தது.
சென்னை, புதுச்சேரி மற்றும் அந்தமான் – நிக்கோபார் தீவுகள் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
சாம்பியன்ஷிப்பின் நிறைவு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், உலக விரைவு சதுரங்க சாம்பியன் கோனேரு ஹம்பி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.
இந்திய சதுரங்க மாஸ் டர்ஸ் பிரிவில், ஆண்கள் பிரிவில் சேதுராமன் எஸ்.பி தங்கப் பதக்கத்தை வென்றார். அவரைப் தொடர்ந்து அர்னவ் மகேஸ்வரி வெள்ளிப் பதக்கமும், பிரதீப் குமார் ஆர்.ஏ வெண்கலப் பதக்க மும் பெற்றனர். பெண்கள் பிரிவில், கீர்த்தி ஸ்ரீ ரெட்டி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார், கனிஷ்கா எஸ் வெள்ளிப் பதக்கமும், பிரதிக்ஷா பி.எஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்திய ரம்மி கிராண்ட்மாஸ்டர்ஸ் – தெற்கு மண்டலம் 2 போட்டியில், யுவராஜ் ஆர். சாம்பியனாக தேர்வாகினார். மகேஷ் முத்துவேல் இரண்டாவது இடத்தையும், முருகேசன் கண்ணதாசன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். நான்காவது முதல் ஆறாவது இடங்களை முறையே கருப்பையா கலியபெருமாள், கொளஞ்சி நாதன் ராஜா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் பெற்றனர். நிகழ்வில் முன் னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்ரீகாந்த், இன்றைய டிஜிட்டல் மற்றும் கடுமையான போட்டி சூழலில் மன விளையாட்டுகளின் முக் கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சதுரங்க கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பி, இந்திய இளைஞர்களி டையே சதுரங்கத்தில் வளர்ந்து வரும் ஆர்வத்தை புகழ்ந்தார். இதில், ஸ்கில் ஆன் லைன் கேமிங் கூட் டமைப்பின் நிறுவனர் நந்தன் ஜா, துணைத் தலை வர் அசோக் தியான்சந்த், தலைவர் சங்கர் அகர்வால், போட்டி இயக்குநரும் இணைச் செயலாளருமான கௌரவ் தியான்சந்த் மற்றும் நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.