பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி உயிரி தொழில்நுட்பத்துறை, கோக்கல் கிராமத்தில் கடந்த 30ம் தேதி “நீலகிரி பழங்குடி கிராமத்துப் பெண் களுக்கான ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி”யை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம், தமிழ்நாடு அரசு, சென்னை மற்றும் தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் மக்கள் அறிவுத்திறன் வளர்ச்சி மையம் ஆகியவற்றின் ஆதரவுடன் வெற் றிகரமாக நடத்தியது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், நீலகிரி மாவட்டத்தின் கோத்தல் பழங் குடிப் பெண்களுக்கு தனிப்பட்ட சுகா தாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இலவச மருத்துவ சேவைகளை வழங்குவதும் ஆகும்.
இந்நிகழ்ச்சியில் கே.ஆர். மருத்துவ மனையிலிருந்து மருத்துவர் நேத்ரா மற்றும் லதா கண்ணன் உணவியல் மற் றும் ஊட்டச்சத்து நிபுணர் பங்கேற்று மாதவிடாய் சுகாதாரம், மகப்பேறு பராமரிப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு, ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்த முக்கி யமான தகவல்களை பகிர்ந்தனர்.
இதில் 100க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து மாவுகள் வழங்கப்பட்டது.
ஆரோக்கிய கல்விக்காக விளக்கப்படங் கள் மற்றும் விளக்க காட்சிகள் அமைக்கப் பட்டன. தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைகள், உடற்பயிற்சி வழிகாட்டல்கள் வழங்கப்பட் டன.
கோத்தல் பழங்குடிப் பெண்கள் ஆர் வத்துடன் பங்கேற்று கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியை கல்லூரி மாண விகளுடன் புவனேஸ்வரி, இணைப் பேராசிரியர் மற்றும் முனைவர் ஜி. அன் பரசி, உதவி பேராசிரியர் ஆகியோர் ஒருங் கிணைத்தனர்.