fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பொதுமக்களை ரோடு ஷோ, வாகனம் மூலம் சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார் பிரச்சார வாகனத்தை...

கோவையில் பொதுமக்களை ரோடு ஷோ, வாகனம் மூலம் சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார் பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்து எஸ்.பி.வேலுமணி பேட்டி

தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 7ம் தேதி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அன்று கவுண்டம்பாளையம் தொகுதி யிலும் பிரச்சாரம் செய்கிறார்.

மறுநாள் 8ம்தேதி, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை ஒட்டி, கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக் கள் மத்தியில் அவர் வருகை தொடர்பாக பிரச்சாரம் செய்யும் வகையில் பிரச்சார வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. இதை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பு வைத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் மேற் கொள்ள வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை மாவட்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பார் கள். கோவையில் பொது மக்களை ரோடு ஷோ மற்றும் வாகன மூலம் சென்று எடப்பாடி பழனிச்சாமி மக் களை சந்திக்கிறார். இதில் லட் சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜுனன் மாநில இளை ஞரணி செயலாளர் கே.ஆர்.ஜெயராமன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செய லாளர் பப்பாயா ராஜேஷ், மாவட்ட பேரவை செய லாளர் பிரபாகரன், காட்டூர் செல்வ ராஜ், உலகநாதன், செந்தில் வேல், மணிமேகலை உள்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img