கோவை மாவட்டத்தில் செயல்படும் பிரபஞ்ச அமைதி ஆசிரமம், சக்தி சதன் ஆதரவற்ற பெண்களுக்கான தங்கும் விடுதி மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகியவற்றை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அன்னூர் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அமைச்சர், முதியோர் நலன் தொடர்பான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கியதுடன், 90 வயதைக் கடந்த முதியோர்களை சிறப்பாக கௌரவித்தார்.
பின்னர் கவுண்டம்பாளையத்தில் உள்ள சக்தி சதன் விடுதியை பார்வையிட்டு, பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை ஆய்வு செய்து, பெண்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.



