மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சர்வதேச அளவில் நவீன பல் மருத்துவ சிகிச்சைக்கான முக்கிய மையமாக உருவெடுத்து வருகிறது.
இந்த மருத்துவமனையின் பல் மருத்துவ பிரிவில் ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 2,500 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கியஅரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக மதுரை வருகின்றனர். பற்களைச் சீரமைக்கும் கிளியர் அலைனர்கள், டென்டல் இம்ப்ளான்ட்கள், ஸ்மைல் டிசைன், வெனியர்ஸ் உள்ளிட்ட நவீன பல் மருத்துவச் சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளில் ஆகும் சிகிச்சை செலவில் சுமார் 40 சதவீதக் கட்டணத்தில் தரமான சிகிச்சை வழங்கப்ப
டுவதுடன், நவீன மருத்துவ உபகரணங்கள், டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் சேவையும் கிடைக்கிறது. வெளிநாட்டு நோயாளிகள் இந்தியா வருவதற்கு முன்பே ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ
மனையின் பல் மற்றும்
தாடை முக அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஜிப்ரீல் ஒய்சுல் கூறுகையில், சர்வதேச தரத்திலான நவீன பல் மருத்துவச் சிகிச்சைகளை குறைந்த செலவில் வழங்கி வருவதாகவும், மதுரையை சர்வதேச பல் மருத்துவ சுற்றுலா மையமாக உருவாக்குவதே தங்களது நோக்கம் என்றும் தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது டாக்டர் தாமோதரன், டாக்டர் ஞானேஸ்வரன் மற்றும் மருத்துவமனை இயக்குநர் திலீப் ஆகியோர் உடனிருந்தனர்.



