Homeபிற செய்திகள்ஹஜ், உம்ரா புனித யாத்திரை செல்வோர், மக்களுக்கு இலவச சிறப்பு பாஸ்போர்ட் முகாம்

ஹஜ், உம்ரா புனித யாத்திரை செல்வோர், மக்களுக்கு இலவச சிறப்பு பாஸ்போர்ட் முகாம்

கோவை குனியமுத்தூரில் தாஜுல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் மற்றும் தி மாடர்ன் டிராவல்ஸ் இணைந்து பாஸ்போர்டு முகாம் நடத்தினர். யுனிவர்சல் ப்ரதர்வுட் அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் நந்தகுமார், நேரு கல்வி குழும இயக்குநர் முரளிதரன் பாஸ்போர்ட் முகாமை தொடங்கி வைத்து வாழ்த்தினார்.

தாஜுல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகிகளான அக்பர் அலி, மாலிக், ரகுமான் உள்ளிட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டு முகாமை சிறப்பித்தனர். இந்த சிறப்பு பாஸ்போர்ட் சிறப்பு முகாமில், பாஸ்போர்ட்டு தொடர்பான பல்வேறு சேவைகள் கட்டணமின்றி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியிருக்கின்றனர்.

முகாம் குறித்து தி மாடர்ன் டிராவல்ஸ் உரிமையாளர் அஜாஸ் கூறுகையில், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பாஸ்போர்ட்டும் இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். திடீரென வெளிநாடு செல்ல வேண்டிய சூழலில் அவசரமாக பாஸ்போர்ட் பெற முயற்சிப்பவர்கள், ஆவணங்களில் உள்ள பிழைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெருக்கடிகளை சந்திப்பதாகவும் அவர் கூறினார். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், ஆதார் கார்டு, மார்க் சீட் உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள பிழைகளை சரிசெய்வதற்கான வழிகாட்டுதல், ஆவணங்களை தயார் செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முகாமில் இலவசமாக வழங்கினர்.
இந்த முகாம் மூலம் ஹஜ் மற்றும் உம்ரா பயணிகள் மட்டுமின்றி, வெளிநாடு செல்ல திட்டமிடும் பொதுமக்களும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். முகாமிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img