காரின் மேற்கூரையில் தொங்கியபடி சுமார் 40 கி.மீ. பயணம் செய்து, 300 கிலோ குட்காவுடன் தப்ப முயன்ற 3 கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் வேல்முருகனுக்கு கோயம்புத்தூர் ரோட்டரி சங்கம் வடக்கு ரோட்டரி 3206 சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அவரது வீர தீர செயலைப் பாராட்டும் வகையில் ரோட்டரி சங்கத்தினர் நேரில் சந்தித்து அனுபவங்களைக் கேட்டறிந்ததுடன், தலைப்பாகை, சால்வை, சந்தன மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி 3206 தலைவர் ஆர்.திவாகர், துணை ஆளுநர் எஸ்.பிரபு, ஏ.ஜே.ஜோய், பப்ளிக் இமேஜ் சேர்மன் ஜவகர், சரவண விக்னேஷ், மகேஷ்வரன், விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



