பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் திருச்சிராப்பள்ளி கிளை, தில்லைநகர் 11வது குறுக்கு கிழக்கு, சாமி டவர்ஸ் தரைதளம் புதிய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சௌதாம்பிகா கல்விக் குழுமம் செயலாளர் ஆர்.செந்தூர் செல்வன், அம்மன் TRY குரூப்ஸ் இயக்குநர் (குழு செயல்பாடுகள்) மற்றும் துணைத் தலைவர் வி.முருகானந்தம், முதன்மைப் பொது மேலாளர் (நிதி மற்றும் மனிதவளம்) விஸ்வநாதன் அருணாச்சலம் ஆகியோர், சாமி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குநனர் பொறியாளர் எம்.இளமுருகன் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். அருகில் வங்கியின் கோவை மண்டல மேலாளர் பாலாஜி எஸ்.என், கிளை மேலாளர் பிரவீன் குமார் எஸ் ஆகியோர் உள்ளனர்.



