Homeபிற செய்திகள்‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆய்வு: அரசு நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை...

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆய்வு: அரசு நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை – கடலூர் கலெக்டர் அறிவுறுத்தல்

காட்டுமன்னார்கோவில் தாலுகா பகுதியில்’உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர்,அரசு நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களிடம் அறிவு றுத்தினார்.

காட்டுமன்னார்கோவில் தாலுகா பகுதியில் ‘உங்க ளைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று வருகை தந்தார். தொடர்ந்து அவர் சிவக்கம் கிராமத்தில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி,நாய்க்கடி மற்றும் விஷபூச்சிக்கடிக்கான மருந்துகளின் இருப்பு,டாக்டர்களின் வருகைப் பதிவேடு மற்றும் ஆய்வகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, ருத்ர சோலை கிராமத்தில் 1.2 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் 5,200 மரக்கன்றுகளைக் கொண்டு மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் பணியை மரக்கன்று நட்டு வைத்து தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, காட்டுமன்னார்கோவில் அரசுமருத் துவமனையில் 80 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வரும் உள்நோயாளிகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான அடிப் படை வசதிகள் மற்றும் மகப்பேறு பிரிவில் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதிகளில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் வழங்கும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
அதையடுதது கோவில்பத்து பகுதியில் புதிதாக கட் டப்பட்டுள்ள பகுதி நேர ரேஷன் கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார்.
மேலும் எடையார் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளுடன் கூடிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து வேளாண் புதிதாக அமைக்கப்பட்ட ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி,செங்கால் ஓடையின் குறுக்கே கரைமேடு மற்றும் காடுவெட்டி சாலையை இணைக்கும் வகையில் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணி,வடவாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட மதகு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து,பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வானமாதேவி ஊராட் சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப் பறை, சுமார் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 60 ஆயிரம் டன் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டு,விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கூறுகையில், பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி,தெருவிளக்கு, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஏதேனும் குறை பாடுகள் கண்டறியப்பட்டால் உடனுக்குடன் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
தொடர்ந்து வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகளுக்கு நில உடமைப் பதிவு தனித்துவ அடையாள எண் பதிவேற்றம் செய்து வழங்குவதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமை பார்வையிட்டு விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
மேலும் குருங்குடி ஊராட்சியில் கறவை மாடு வளர்ப்புப் பண்ணை,வடவாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள மதகு, வீராணநல்லூர் ஊராட்சியில் இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி பண்ணையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மாமங்கலம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி,செங்கால் ஓடையின் குறுக்கே கரை மேடு மற்றும் காடுவெட்டி சாலையை இணைக்கும் வகையில் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணி வடவாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட மதகு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்டதுறை அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img