புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய சமூக ஊடக தகவல்கள் குறித்து பீதியடையத் தேவை இல்லை என்று சைமா மற்றும் சிட்டி தெரிவித்துள்ளது.
மிகுந்த தொழில் வளர்ச்சி காரணமாக தமிழகம் தொழிலாளர் பற்றாக் குறையை எதிர்கொள்ளத் தொடங்கியது.
அதை சமாளிக்க பீகார், ஒடிஷா, சத்தீஸ்கர், உத்தரகண்ட், அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்ய முன்வந்து, கடந்த 10 ஆண்டுகளாக அவர்களை பணியில் அமர்த்துவது நடை முறையில் இருந்து வருகிறது.
பேட்டி
இது தொடர்பாக கோவையில் இந்திய ஜவுளிக் கூட்டமைப்பின் (CITI) தலைவர் த.ராஜ்குமார், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (SIMA) தலைவர் ரவிசாம் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:
ஊதியத்தில் உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் இடையே எந்த பாகுபாடும் இல்லை. இரு தரப்பு தொழிலாளர்களும் தொழில்துறையால் சமமாக நடத்தப்படுகிறார்கள்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளின் அடிப்படையில் உணவுடன் கூடிய விடுதி, தங்குமிடத்தை தொழில் துறையினர் வழங்குகின்றனர். இருப்பினும் சில வாரங் களாக, சில குழுக்கள், அரசியல் அமைப்புகளின் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தப்படுவது பற்றி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், உள்ளூர் தொழிலாளர்களுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. சமூக ஊடக செய்திகள் தவறானது. அவை உண்மையான நிலையை வெளிப்படுத்தவில்லை. தமிழக காவல்துறை உயர் அதிகாரி சைலேந்திரபாபு இதனை ஒரு காணொளி மூலமாக தெளிவுபடுத்தி உள் ளார்.
இது குறித்து பேச கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 2-ம் தேதி காணொளி வாயிலாக கூட்டம் நடத்தப்பட்டு உண்மை நிலை விளக்கப்பட்டது. சமூக ஊடக செய்திகள் தேவையின்றி பரவுகின்றன.
இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களோ அல்லது தொழில்துறையினரோ பீதியடையத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் பிரச்சினையை ஏற்ப டுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மாநிலத்தில் தொழில் அமைதியை ஏற்படுத்த அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.