fbpx
Homeபிற செய்திகள்ஸ்டேஃப்ரீ விளம்பரத்தூதராக நடிகை கியாரா அத்வானி

ஸ்டேஃப்ரீ விளம்பரத்தூதராக நடிகை கியாரா அத்வானி

பெண்களின் மாதவிடாய் காலத்தில் சிறந்த தரம் வாய்ந்த, மென்மையான சுகாதாரமான சானிட்டரி பேட்களை வழங்கும் இந்தியாவின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றான ஸ்டேஃப்ரீ இன்று பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரும் இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் நடிகை கியாரா அத்வானியை அதன் விளம்பர தூதராக நியமித்துள்ளது.

இவர் ஸ்டேஃப்ரீ செக்யூர் XL பேட்களுக்கான அதன் சமீபத்திய விளம்பரத்தில் தோன்றியுள்ளார். கியாரா அத்வானி பிராண்டின் நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை அறிவித்து இன்றைய காலத்து பெண்களை பிரதிபலிக்கிறார்.

ஸ்டேஃப்ரீ உடனான தனது கூட்டிணைவு குறித்து கியாரா அத்வானி கூறியதாவது:
இன்றைய காலத்து பெண்கள் யாராலும் தடுக்க முடியாதவர்கள். இன்றைய பெண்ணின் உற்சாகம், உறுதி மற்றும் மனதைரியத்தை எதுவும் தடுக்க முடியாது என்பதை நான் உண்மையிலேயே நம்பு கிறேன். ஸ்டேஃப்ரீயின் புதிய அடையாளமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மாதவிடாயுடன் தொடர்புடைய பயம், அவமானம் மற்றும் அசௌக ரியத்திலிருந்து விடுபட்டு மில்லியன் கணக்கான இளம் பெண்கள் மற்றும் பெண்கள் தங்கள் விருப்பங்களையும் குறிக்கோள்களையும் நிறைவேற்ற உதவும் இந்த பிரபலமான பிராண்டின் பிரதிநிதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்டே ஃப்ரீ செக்யூர் XL 12 மணி நேரம் வரை சௌகரியம் மற்றும் நீண்டநேர பாதுகாப்பை வழங்குகிறது. என்றார்.

ஜான்சன் அண்ட் ஜான்சன்

ஜான்சன் அண்ட் ஜான்சன் கன்ஸ்யூமர் ஹெல்த் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் எசென்ஷியல் ஹெல்த் வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவர் மனோஜ் காட்கில் கூறுகையில், ஸ்டேஃப்ரீ XL-இன் சமீபத்திய விளம்பரமான ‘தின் தும்ஹாரே சாத் சலேகா’ மூலம், இந்த பிராண்ட் பெண்கள் அர்த்தமுள்ள மற்றும் முழு மனநிறைபான வாழ்க்கையை வாழச் செய்து அவர் களின் கனவுகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற உதவுகிறது, ஸ்டேஃப்ரீ குடும்பத்தின் அங்கமாக கியாரா அத்வானி இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

டிடிபி முத்ரா குழுமத்தின் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ராகுல் மேத்யூ கூறுகையில், ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கான நேரத்தையும் மற்றும் அந்த நேரத்தில் மற்றும் மாதவிடாய் நேரத்திலும் கூட என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதிலும் முழு உரிமை கொண்டிருக்க வேண்டும் என்றும் ஸ்டேஃப்ரீ நம்புகிறது. இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களிடம் சரியான நபராக கியாரா உள்ளார் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img