தகட்டு உலோக உற்பத்தி தொழிலகங்களுக்கு திறன் மிக்க உற்பத்தி மற்றும் டிஜிட்டல் உருமாற்ற (DX) தீர்வுகளை வழங்குவதில் உலகளவில் முன் னோடியான ஜப்பானின் ஆல்ஃபா டிகேஜி நிறுவனம், உலோக உற்பத்தி தொழில்துறைக்காக 4 புதிய தயாரிப்புகளை செய்துள்ளது.
நிகழ்ச்சியில் ஆல்ஃபா டிகேஜியின் தலைமை செயல் அலுவலர் டோஷியோ டகாகி அதிகாரபூர்வமாக இத்தயா ரிப்புகளை வெளியிட்டு அறிமுகம் செய்தார். BuP Net, RPA Gaia, வெல்டுDX,, மற்றும் இன்ஸ்பெக்ஷன் DX, என்ற பெயர்களில் புதிதாக அறிமுகம் செய்யப் பட்டிருக்கும் இத்தீர்வுகள், திறன்மிக்க உற்பத்தி செயல்பாட்டில் அடுத்த உயர்நிலைக்கு தகட்டு உலோக உற்பத்தியாளர்கள் முன்னேற்றம் காண்பதை ஏதுவாக்குகிறது.
இந்தியாவின் சிறு, நடுத்தர தொழில் நிறுவனப் பிரிவின் (SME) மீது சிறப்பு கவனம் செலுத்தவிருக்கும் தனது நோக்கத்தை ஆல்ஃபா டிகேஜி அறிவித்திருக்கிறது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்தீர்வு களின் மூலம், இந்திய உற்பத்தி சூழலமைப்பில் அமையும் தனது திட் டத்தை இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அத்துடன், ஒரு புதிய வாடிக்கையாளராக ஹைதராபாத்-ஐ சேர்ந்த ஏர்டெக் இன்னோ வேஷன்ஸ் பிரைவேட் லிமி டெட் உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப் பதையும் ஆல்ஃபா டிகேஜி பகிர்ந்து கொண்டிருக்கிறது.
முன்னேற்றங்கள்
ஐஐடி மெட்ராஸ்-ன் இயந்திர பொறியியல் துறையின் பேராசிரியரும், வி பலராமன் இன்ஸ்டிட் டியூட் இருக்கை பேராசிரியரும் மற்றும் மேம்பட்ட உற்பத்தி உருவாக்க மையத்தின் (AMTDC) செயலருமான பேராசிரியர் என் ரமேஷ் பாபு உற்பத்தி தொழிலகங்களுக்கான IoT மற்றும் டிஜிட்டல் உருமாற்ற துறையில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றங்கள் குறித்து பேசினார்.
ஆல்ஃபா டிகேஜி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) டாக்டர். தன பாண்டி கூறியதாவது: எமது தயாரிப்புகளின் தொகுப்பு, ஷீட் மெட்டல் தொழில்துறையில் ஒட்டுமொத்த உற்பத்தி செயல் முறை முழுவதையும் உள்ளடக்கியதாகும்.
ஆர்டர் கிடைக்கப்பெறுவதிலிருந்து டெலிவரி வரை ஒட்டு மொத்த செயல்முறையும் இதில் உள்ளடங்கும் என் றார். ஆல்ஃபா டிகேஜி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எம். குமார் பேசுகையில், “புதிய தயாரிப்பு அணிவரிசையின் மூலம் இந்திய உற்பத்தி சூழலமைப்பில் வலுவாக கால்பதிக்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்,” என்றார்.
கனடாவின் 5ஜி குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் அனந்த் சேஷன், மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தத்தோ நாதன் சுப்பையா, ஐஐடி மெட்ராஸ்-ன் மேம்பட்ட ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் கமாண்டர் ஆர் பி வெர்மா (ஓய்வு), ஏர்டெக் இன்னோவேஷன்ஸ் தலைவர் டாக்டர் எஸ் ராவ் வட்லா, அந்நிறுவனத்தின் ஆர் அண்ட் டி பிரிவின் தலைவர் உதய் குமார், TCE மெக்காட்ரானிக்ஸ் துறையின் பேராசிரியர் கனகராஜ், அம்ரிதா பல்கலையின் பொறியியல் துறை துணை பேராசிரியர் ராஜீவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.