Homeபிற செய்திகள்எஸ்எம்எஃப்ஜி 1000வது கிளை துவக்கம்

எஸ்எம்எஃப்ஜி 1000வது கிளை துவக்கம்

எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட் கம்பெனி லிமிடெட், நவி மும்பையில் வாஷியில் அமைந்திருக்கும் தனது 1000வது கிளையை திறப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது.

எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட், ஒரு சிறப்பு கவர் மற்றும் மை ஸ்டாம்ப் வெளியிட இந்திய அஞ்சல் துறையுடன் கூட்டாக இணைந்திருக்கிறது. இதன் அதிகார பூர்வமான வெளியீட்டு விழா, எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஷாந்தனு மித்ராவுடன் இணைந்து மும்பையில் உள்ள ஜப்பானிய துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் யாகி கோஜி, இந்திய அஞ்சல் துறையின் மகாராஷ்டிர தலைமையக வட்டத்தின் நிறுவனர் அபிஜித் பன்சோடே, போன்றோரின் வருகையால் சிறப்பிக்கப்பட்டது.

பெரிய மற்றும் பன்முகத் தன்மை வாய்ந்த இந்திய சந்தையில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான எஸ்எம் எஃப்ஜி இந்தியா கிரெடிட் டின் தொலை நோக்கு பார் வைக்கு அதன் 1000வது கிளை தொடக்கம் ஒரு சான்றாகும். 2007-ல் துவங்கப்பட்டதி லிருந்து தொடர்ந்து வளர்ந்து வரும் இந்த நிறுவனம், இப்போது 670 நகரங்கள் மற்றும் 70,000 கிராமங்களில் 23,000த்திற்கும் மேலான ஊழியர்களின் ஆதரவோடு இயங்கி வரும் இந்தியா முழுவதும் பரவியுள்ள ஒரு நிறுவனமாக பரிணமித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img