Homeபிற செய்திகள்கரூர் மாவட்டத்தில் ‘உயர்வுக்குப் படி’ முகாம்கள்: ஆட்சியர் தங்கவேல் தகவல்

கரூர் மாவட்டத்தில் ‘உயர்வுக்குப் படி’ முகாம்கள்: ஆட்சியர் தங்கவேல் தகவல்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ”உயர்வுக்குப் படி 2024” முகாம் முன் திட்டமிடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆட்சியர் தங்கவேல் பேசியதாவது: தமிழ்நாடு அரசு தமிழக மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24ம் கல்வியாண்டில் உயர்கல்வி தொடராத 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கு ஏதுவாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ”உயர்வுக்குப் படி 2024” முகாம் கரூர் மற்றும் குளித்தலை ஆகிய இடங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இம்முகாமின் நோக்கம் உயர்கல்வி தொடராத மாணக்கர் களை உயர்கல்வியில் சேர்ந்து எதிர்காலத்தில் அவர்கள் பயின்ற துறையில் சிறந்த வல்லுநராக உருவாக்குவதே ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கரூர் வருவாய் வட்டத்தில் ”உயர்வுக்குப் படி 2024” முகாம்கள் வருகின்ற 09.09.2024 மற்றும் 19.09.2024 ஆகிய தேதிகளிலும், குளித்தலை வருவாய் வட்டத்தில் 13.09.2024 மற்றும் 24.09.2024 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் கண்ணன், மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, வருவாய் கோட்டாட்சியர்கள் முகமதுபைசல் (கரூர்), தன லெட்சுமி (குளித்தலை), அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img