fbpx
Homeபிற செய்திகள்ஸ்மார்ட் சிட்டி திட்டம்: கோவைக்கு முதல் பரிசு

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: கோவைக்கு முதல் பரிசு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதாக கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் கோவை மாநகராட்சி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.புரம் மாதிரி சாலை அமைத்தல், குளக்கரையை புனரமைத்து மேம்படுத்துதல் பணிக்காக முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆர்.எஸ்.புரம் மற்றும் டிபி சாலையின் இருபுறமும் 62 தகவல் பலகைகளை நிறுவும் பணி விரைவில் நடைபெறும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் முன்னதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img