fbpx
Homeதலையங்கம்2 தொகுதிகள் ஒதுக்கும்படி சித்தராமையா பிடிவாதம்!

2 தொகுதிகள் ஒதுக்கும்படி சித்தராமையா பிடிவாதம்!

கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரான சித்தாராமையா வருணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கிடையே வருணா தொகுதியில் பாஜக அமைச்சர் சோமண்ணாவை அக்கட்சி களமிறக்கி உள்ளது. இதனால் கடும் போட்டி உருவாகும் நிலையில் தனக்கு 2 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என சித்தராமையா தற்போது பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலார் தொகுதியையும் தனக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறார்.

மேலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் தான் அவர் தனது பாதுகாப்புக்காக 2 தொகுதிகளை கேட்கிறார்.

இருப்பினும் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் முடிவு அறிய நாம் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இதற்கிடையே கர்நாடகாவில் இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. அங்கு காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் சமபலம் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகிறார்கள். காங்கிரஸ் வெற்றி பெறும் என்றே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

மோதலைத்தவிர்த்து ஒற்றுமையாக காங்கிரஸ் தேர்தல் களம் கண்டால் தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை!

படிக்க வேண்டும்

spot_img