fbpx
Homeபிற செய்திகள்மதவாத கட்சியான பாஜக வேண்டாம்: அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிரச்சாரம்

மதவாத கட்சியான பாஜக வேண்டாம்: அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிரச்சாரம்

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சாய்பாபா காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி வரவேற்பளித்தனர். மேலும் அங்கிருந்த இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எனக்கு மக்களாகிய உங்களை நம்பி தான் வாய்ப்பு அளித்துள்ளனர் என்றார். திமுக இவர்களின் பாதுகாவலர் அவர்களின் பாதுகாவலர் என்றெல்லாம் கூறுவார்கள் என தெரிவித்த அவர் ஆனால் அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்றார்.

அதிமுக மக்களுக்கான இயக்கம் எனவும் கொரோனா காலத்தில் எந்தவித கட்சி பேரமும் பாராமல் அனைவருக்கும் உதவிய இயக்கம் அதிமுக தான் என்றார். எம்ஜிஆர், ஜெயலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வழியில் ஜாதி மத பேதமின்றி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் இல்லாமை என்கின்ற நிலை வேண்டும் என்று உழைக்கின்ற இயக்கம் அதிமுக என தெரிவித்தார்.

மேலும் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அவர் நோன்பு கஞ்சிக்கு வழங்கப்பட கூடிய அரிசையை கொடுத்து உதவியது அம்மா(ஜெயலலிதா) எனவும் அதனை மேலும் உயர்த்தி வழங்கியது எடப்பாடியார் என்றார்.

சிறு வயதில் இருந்தே அனைவரும் மனித நேயத்துடன் தான் பழகி வருகிறோம் எனவும், ரம்ஜானுக்கு இஸ்லாமியரகள் பிரியாணி கொடுப்பார்கள், கிறிஸ்துமஸ் க்கு கிறிஸ்துவர்கள் கேக் கொடுப்பார்கள், தீபாவளிக்கு இந்துக்கள் இனிப்புகள் கொடுப்பார்கள், தமிழர் திருநாளான பொங்கலை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம் எனவும் அப்படிப்பட்ட நாடு தமிழ்நாடு எனவும், அப்படிப்பட்ட ஊர் கோயமுத்தூர் என்றார்.

மேலும் பல்வேறு நலத்திட்டங் களை வழங்கியதும் அதிமுக தான் என தெரிவித்த அவர் இது திமுகவால் முடியாது என்றார். எனவே மதவாத கட்சியான பாஜகவும் வேண்டாம் குடும்ப கட்சியான திமுகவும் வேண்டாம் மக்களுக்கான இயக்கமான அதிமுக வேட்பாளரான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் உடன் இருந்தார்.
முன்னதாக சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலுக்கு சென்ற அவர் ஐயப்பன் முன்பு கீழே விழுந்து வணங்கி கொண்டார். பின்னர் விளக்கேற்றி வழிபட்ட அவர் கோவில் பசுக்களுக்கு வாழைப்பழங்கள் வழங்கினார்.

பின்னர் கோவிலில் நடைபெறும் ஆராட்டு விழாவிற்காக அழைத்து வரப்பட்டிருந்த மணிசேரி ராஜேந்திரன் என்ற யானையை தடவிக்கொடுத்து வணங்கினார். இந்நிகழ்வில் சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் உடன் இருந்தார்

படிக்க வேண்டும்

spot_img