fbpx
Homeபிற செய்திகள்சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளை வெள்ளி விழா கொண்டாட்டம்

சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளை வெள்ளி விழா கொண்டாட்டம்

சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளை, 25 ஆண்டுகால சிறப்பான சேவையை நிறைவு செய்து வெள்ளிவிழாவை கொண்டாடியது. இந்த விழாவில் வாடிக்கையாளர்களுடனான நீண்டகால நம்பிக்கை, பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பங்களிப்பு கௌரவிக்கப்பட்டது.
விழாவில் பேசிய சுந்தரம் ஃபைனான்ஸின் தமிழ்நாடு பிராந்தியத் தலைவர் ராஜேஷ் வெங்கட், “நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை உண்மை, நேர்மை மற்றும் சேவை மனப்பான்மையே” என்று கூறினார்.
சீனியர் கிளை மேலாளர் ஹெச்.ரமேஷ் பாபு, தொழில்முனைவோருக்கு நம்பகமான நிதி கூட்டாளியாக இக்கிளை விளங்கி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, ராஜேஷ் வெங்கட் கையொப்பமிட்ட பாராட்டுக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img