fbpx
Homeபிற செய்திகள்எம்.ஜி.எம். ஹெல்த்கேரில் அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வெற்றிகரமாக சிகிச்சை

எம்.ஜி.எம். ஹெல்த்கேரில் அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வெற்றிகரமாக சிகிச்சை

14 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ‘மீசோகார்டியா’ என்ற அரிய குறைபாடு இருந்தது. மேலும், எலும்பு வளர்ச்சிக் குறைபாடு மற்றும் பல உறுப்பு பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘மோர்கியோ சிண்ட்ரோம்‘ என்ற அரிய மரபணு நோயாலும் அவள் பாதிக்கப்பட்டிருந்தார். இதனுடன், மிட்ரல் வால்வு கடுமையாக சேதமடைந்திருந்தது.
இந்நிலையில், எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவக் குழு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை மூலம் சேதமடைந்த மிட்ரல் வால்வை அகற்றி, 25 மில்லிமீட்டர் அளவிலான மெக்கானிக்கல் வால்வை வெற்றிகரமாக பொருத்தியது. இதன் மூலம் இதயத்தில் ரத்த ஓட்டம் சீரானது.
குழந்தைகளுக்கான இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.கே.ஆர். நவீன் டேவிட்சன் தலைமையிலான மருத்துவக் குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. இது குறித்து நவீன் டேவிட்சன், முழுமையாக குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என தெரிவித்தார்.
இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன், பல்துறை மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் இந்த அரிய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறினார்.
தொடர்ந்து நிறுவனத்தின் இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ், சிகிச்சைக்கு பின் மிக நெருக்கமான கண்காணிப்பு தேவைப்பட்டது, என்றார்.

படிக்க வேண்டும்

spot_img