ஏற்காடு ஊராட்சி ஒன்றி யம், முளுவி கிராமத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் சார் பில் 10 மாவட்டங்களுக்கு பழங்குடியினருக்கான நடமாடும் சித்த மருத்துவக் குழு வாகனங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேலத்தில் இருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்கள். பின்னர், அமைச்சர் தெரிவித்ததாவது:
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பழங்குடியின மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் விதமாக அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று உரிய மருத்துவம் செய்திடும் உன்னத நோக்கில் நடமாடும் சித்த மருத்துவக் குழு புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுக ளுக்கு முன்னர் இரண்டு மாவட் டங்களில் சோதனை முயற்சியில் தொடங்கப்பட்ட நடமாடும் சித்த மருத்துவக் குழு வாகன திட்டம் தற்போது கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையிலும், திருப்பூர் மாவட்டம் எரிசனாம் பட்டுவிலும், தருமபுரி மாவட் டம் சித்தேரியிலும், திண்டுக்கல் மாவட்டம் வடகொஞ்சியிலும், சேலம் மாவட்டம் நாகலூரி லும், தேனி மாவட்டம் ஆகமலையிலும், திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையிலும், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியலூரிலும் மற்றும் திருச்சி மாவட்டம் செங்காட்டுப்பட்டி உச்சி ஆகிய தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு தலா ஒரு நடமாடும் சித்த மருத்துவக் குழு என்கிற வீதத்தில் பழங்குடியினருக்கான நடமாடும் சித்த மருத்துவக் குழு அடங்கிய வாகனம் புதிதாக உருவாக்கப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலமாக மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நோய்களை நீக்கி, நல்வாழ்வு மேம்பட்டு நோயின்றி வாழவும் அவர்களின் வாழ்வு மேம்படவும் இவ்வாகனத்தில் ஒரு சித்த மருத்துவர், ஒரு மருந்தாளுநர், ஒரு பல்நோக்கு பணியாளர் என்கின்ற வகையில் நடமாடும் சித்த மருத்துவக் குழு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று மருத்துவம் பார்க்க இருக்கின்றனர். இதேபோன்று மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், தொழிலாளரைத் தேடி மருத்துவம் திட்டம் போன்ற மக்களைத் தேடி மருத்துவர்கள் என்ற வகையில் கடைக்கோடி மக்களுக்கும் இதுபோன்ற மருத்துவத் திட்டங்களால் பயன் பெற முடிகிறது.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளில் அரசின் மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. பெண்கள் கருவுற்ற நாள் முதல் தொடர்ந்து பிரசவம் நிகழும் வரை மற் றும் பிரசவத்திற்கு பின்னும் மொத்தம் நான்கு பெட்டகங்கள் வழங் கப்படுகின்றன.
சேலம் மாவட்டம், ஏற்காடு, நாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 91 பேர் புறநோயாளியாக பயன் பெற்று வருகின்றனர். அதே போல், இங்குள்ள சித்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 62 பேர் புறநோயாளியாக பயன்பெற்று வருகின்றனர்.
ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக சித்த மருத்துவமும் மலைப்பகுதிகளில் அதிகளவில் விரும்பப்படுகிறது.
இன்றைய தினம் சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், வாழவந்தி வட்டாரத்திற்குட்பட்ட நாகலூரில் ஒரு இலட்சம் பழங்குடியினர் பயன் பெறும் வகையில் நடமாடும் சித்த மருத்துவக் குழு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பல்வேறு நோய்களுக்குத் தேவைப்படும் சித்த மருத்துவ ஆலோசனைகளும் மருத்துவமும், நோயின்றி வாழ்வதற்கான தற்காப்பு வாழ்வியல் முறைகளுக்கான வழிகாட்டலும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ பதித் துறை ஆணையர் மைதிலி கே.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சௌண்டம்மாள், மரு.யோ கானந்த், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.க.பெ. இராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் புஷ்பராணி, ஏற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சின்ன வெள்ளை, நாகலூர் ஊராட்சிமன்றத் தலைவர் (பொ) குப்புசாமி, ஏற்காடு ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் சேகர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.