அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் விண்ணப்பிக்க பல்கலைக்கழக இணையதளத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) சிங்காரவேல் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொ) குமார், புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், இயக்குனர் மாணவர் சேர்க்கை பிரிவு பாலபாஸ்கர், துணை இயக்குனர் மாணவர் சேர்க்கை பிரிவு, மாணிக்கவாசகன், மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ், துணைவேந்தரின் தனிச்செயலாளர் பாக்யராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் மாணவர் சேர்க்கை பற்றிய விபரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.



