fbpx
Homeபிற செய்திகள்சென்னை மேற்கு தாம்பரத்தில் தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் துவக்கம்

சென்னை மேற்கு தாம்பரத்தில் தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் துவக்கம்

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய ஜுவல்லரி ரீடெய்ல் பிராண்டான தனிஷ்க் சென்னை மேற்கு தாம்பரத்தில் தனது புதிய விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தனது விற்பனை செயல் பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தனிஷ்க் நிறுவனத்தின் 66-வது விற்பனை நிலையம் மற்றும் சென்னை மாநகரத்தில் 24-வது விற்பனை நிலையம் என்ற ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இப்புதிய விற்பனை நிலையத்தை டைட்டன் நிறுவனத்தின் ஜுவல்லரி பிரிவின் தலைமை செயல் அதிகாரி அருண் நாராயண் மற்றும் தமிழ்நாடு – கேரளா ஜுவல்லரி பிரிவின் பிசினஸ் ஹெட் நரசிம்மன் ஆகியோர், தனிஷ்க் நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் வாடிக்கையாளர் கள் முன்னிலையில் திறந்து வைத்தனர்.

மேற்கு தாம்பரத்தில் புதிதாக அறிமுகமாகும் இந்த புதிய விற்பனை நிலை யத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், தனிஷ்க் ஒரு பிரத்தியேக அறிமுகச் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் நகைக ளுக்கு தங்க நாணயத்தை அறிமுக சலுகையாக பெறலாம். இந்தச் சலுகை மே 1 முதல் மே 3 வரை மட்டுமே பொருந்தும்.

தொடர்ந்து அருண் நாராயண், எங்களது பல்வேறு வகைகளிலான வடிவமைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறை வேற்றி, அவர்களின் வாழ்வின் முக்கியக் கொண் டாட்டங்களில் ஒரு அங்கமாக இருக்க நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.

தனிஷ்க் நிறுவன சர்க்கிள் பிசினஸ் மேனேஜர் தினேஷ் குமார், வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப இந்த விற்பனை நிலையம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img