Homeபிற செய்திகள்கோயம்புத்தூர் பிரீமியர் லீக் கிரிக்கெட் ஏப்.5ல் தொடங்குகிறது

கோயம்புத்தூர் பிரீமியர் லீக் கிரிக்கெட் ஏப்.5ல் தொடங்குகிறது

கோவையில் உள்ள மீடியா ஒன் மற்றும் தௌசண்ட் பிரிக்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் பிரீமியர் லீக் என்ற கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்கள் பங்கேற்பர்.
அவர்களுக்கான அடுத்த கட்ட நகர்விற்கு ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டி அமைந்து வருகிறது.

அந்த வீரர்களுக்கு டிஎன்பிஎல் மற்றும் லீக் பிளேயர்ஸ் உடன் சேர்ந்து விளையாட இந்த போட்டி மிகவும் உதவியாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டிற்கான போட்டி நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்தான அறிமுக நிகழ்ச்சி கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.
ஏப்ரல் 5ஆம் தேதி இந்த சிபிஎல் போட்டி துவங்க உள்ளதாகவும் இப்போட்டிகள் மூன்று வாரங்கள் நடைபெற உள்ளதாகவும் விளையாட்டின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த
போட்டியில் 10 அணிகளும் 160 வீரர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img