கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி, கோவை ரைபிள் கிளப்பில் எஸ்.ஐ முதல் ஏ.சி., எஸ்.பி வரையிலான கோவை மாநகர காவல் துறை அதிகாரிகளுக்கு 9 எம்.எம் பிஸ்டலில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடத்தப்பட்டது.
இதில் 9 ஏ.சி. எஸ்.பி., 22 இன்ஸ் பெக்டர்கள், 40 எஸ்.ஐ.க்கள் என மொத்தம் 71 பேர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் பங்கேற்பாளர்களுக்கு ஸ்டிரிப்பிங் – அசெம்பிளிங், லோட் & அன்லோட், இலக்கு, சுத்தம் செய்தல் – பராமரிப்பு, பாதுகாப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.