கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி நிறுவனத்தலைவர் மறைந்த உழவர் காவலர் என்.எஸ்.பழனிசாமி முன்னாள் எம்எல்ஏ விவசாயிகளுக்காக தன் வாழ்நாளில் பல்வேறு தியாகங்களை செய்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு அவ ரின் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் நாதகவுண்டன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மணி மண்டபம் திறப்பு விழா வரும் ஆகஸ்ட் 18ம் தேதி என்.எஸ்.பழனிசாமியின் 82வது பிறந்தநாளில் நடைபெற உள்ளது.
இதனை, எதிர்கட்சி தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். அதற்கான அழைப்பிதழை ஏர்முனை இளைஞர் அணி தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர், திரைப்பட ஒளிப்பதிவாளர் வெற்றி எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வழங்கினார்.
அப்போது அதிமுக திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம் எல் ஏ, அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன், ஏர்முனை மாநில செயலாளர் சக்திவேல்மணி உள் ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.