fbpx
Homeதலையங்கம்‘சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தகுந்த நேரம்!

‘சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தகுந்த நேரம்!

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம் சார்பில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது.

இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இராமர் பாலம் குறித்து அறிவியல் பூர்வமாக எதும் நிரூபிக்கவில்லை என்றாலும் சேது சமுத்திரத் திட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் புராதனம், நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி உள்ளதாக கூறினார்.

பின்னர் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதி கூறினார்.

தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு மதச்சாயம் பூசக் கூடாது என்றார். தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக துரோகம் செய்துள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என சாபம் விடுவதாகவும் கூறினார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசுகையில், சேது சமுத்திரத் திட்ட கால்வாயை இனிமேல் திராவிட கால்வாய் என்றே அழைப்போம் எனக் கூறினார்.
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்து உள்ளன. பாஜக தலைவர் அண்ணாமலை கூட, ராமர் பாலத்தை தவிர்த்து திட்டத்தை நிறைவேற்றலாம் என பச்சைக்கொடி காட்டி உள்ளார்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் மாவட்டங்களில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என்பதை யாரும் மறுக்கவியலாது. எனவே, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் பணி உடனடியாக ஒன்றிய, தமிழக அரசுகளால் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எதிர்ப்பே இல்லை என்ற நிலை உருவாகி உள்ள இந்த காலக்கட்டத்தில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கை.
நிறைவேற்றப்படுமா இந்த மாபெரும் திட்டம்?

படிக்க வேண்டும்

spot_img