fbpx
Homeபிற செய்திகள்இஸ்லாமிய அமைப்புகள் குடியரசு தினவிழா

இஸ்லாமிய அமைப்புகள் குடியரசு தினவிழா

மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை வட்டார ஜமா அத்துல் உலமா சபை இணைந்து நடத்தும் இந்திய குடியரசின் 74 வது ஆண்டு விழா கொடியேற்றம் நிகழ்ச்சி ஐக்கிய ஜமா அத் பேரவை கௌரவ தலைவர் வி.எம். இ.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது ஹாஷிம் சிராஜி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய ஜமா அத் பேரவை தலைவர் ஹாஜி முஹம்மது ஷரீப்,செயலாளர் அக்பர் அலி,துணை செயலாளர் அய்யூப், முஹம்மது இல்யாஸ், சின்னப்பள்ளி வாசல் இமாம் முஹம்மது முஹ்யித்தீன், கோவை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை செய்தி தொடர்பாளர் முஹம்மது இப்ராஹிம் சிராஜி உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img