fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் - புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் இன்று திறப்பு: இரா.அருள் எம்எல்ஏ...

சேலத்தில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் – புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் இன்று திறப்பு: இரா.அருள் எம்எல்ஏ திறந்து வைத்தார்

உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால்பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன் னோடி நிறுவனமான மலபார் கோல்டு& டைமண்ட்ஸ் நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை இன்று சேலத்தில் திறந்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட ஷோ ரூமில் இரண்டு தளங்களில் அதிகமான இடவசதி, அதிகமான கலெக்சன்கள் அதிகமான டிசைன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இந்த ஷோரூமை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் யாசர் (மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர்), சபீர்அலி (மலபார் கோல்டு தமிழ்நாடு மண் டல வணிகதலைவர்), நௌசாத் (மலபார் கோல்டு தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர்), ராஜசேகரன் (மலபார் கோல்டு-டைமண்ட்ஸ் சேலம் கிளை தலைவர்), பிரபு ராம்குமார் (மலபார் கோல்டு&டைமண்ட்ஸ் சேலம் கிளை இணை தலைவர்), மற்றும் மலபார் கோல்டு &டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர் கள் மற்றும் கிளை ஊழி யர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 300 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது,

தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர் கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர் ஆகியநகரங்களில் 19 கிளைகளை கொண்டுள் ளது. இந்த ஷோரூமில் ஏராளமான தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் உள்ளன. மலபார் கோல்டு அண்ட் டைம ண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன் கள் கிடைப்பது சிறப்பம் சமாகும்.

‘எரா’

அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’ பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம் பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக் \கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img