fbpx
Homeபிற செய்திகள்தடகளப் போட்டிகளை துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி

தடகளப் போட்டிகளை துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி

வேலம்மாள் பள்ளி நிர்வாகம் சார்பில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 5 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டி துவக்கவிழா இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்தநிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அவருக்கு ட்ரம் செட் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கௌரவ அழைப்பாளராக இந்திய பாராலிம்பக் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் பங்கேற்றார்.

முதல் நிகழ்ச்சியாக மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் சுமார் 13,000 பேர் நடத்திய அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்த தடகள போட்டியில் ஓட்டப்பந்தயம் , நீளம் தாண்டுதல் ,உயரம் தாண்டுதல் , வட்டு எறிதல் , ஈட்டி எறிதல் உள்ளிட்ட 75 விதமான போட்டிகள் நடைபெற உள்ளது.

முதல் போட்டியாக ஓட்டப்பந்தய போட்டியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டம்மி துப்பாக்கியால் சுட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img