மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், கோவை மற்றும் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை இணைந்து நடத்தும் அனைத்து பழங்குடியினருக்கும் வேளாண் கருவிகள் சென்றடையச் செய்யும் நோக்கில் தொல்குடி ஐந்தினை திட்டம் மூலம் மாநில அளவிலான பழங்குடி உழவர் சங்க பொறுப்பாளர்கள் சந்திப்பு (கலந்துரையாடல்) சேலத்தில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டு நாட்கள் (14 மற்றும் 15, ஜூலை 2025) நடைபெற்றது.
இதில் பட்டு வளர்ச்சித்துறையின் இயக்குநர் கி.சாந்தி, மாநில திட்ட மேலாளர் பொன்வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள், மத்திய வேளாண் நிறுவனம் தலைவர் ரவீந்திரநாயக் மற்றும் முதுநிலை அறிவியலார் செந்தில்குமார், திட்ட தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சேலம், தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பழங்குடி விவசாயிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் வேளாண் இயந்திரங்களை பெறுவதற்கான மைய ஒப்பந்தங்கள் பராமரிப்பு, விதிகள் மற்றும் இத்திட்டத்தை விவரிவாக்க கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது.



